Sunday, 29 December 2013

டர்பன் டெஸ்ட் கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்கா அணி 500 ரன்கள் குவிப்பு Durban Test Cricket South Africa team 500 runs

Durban Test Cricket South Africa team 500 runs டர்பன் டெஸ்ட் கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்கா அணி 500 ரன்கள் குவிப்பு Durban Test Cricket South Africa team 500 runs

டர்பன், டிச. 29–

இந்தியா–தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 2–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டர்பனில் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் இந்தியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 181 ரன் எடுத்திருந்தது.

2-ம் நாள் ஆட்டத்தில் புஜாரா 70ரன்னில் வெளியேறினார். விஜய் 97 ரன்னில் ஸ்டெயின் பந்தில் ஆட்டமிழந்தார். கோலி 46, ரகானே 51 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர். இந்திய அணி 334 ரன்னுக்கு ஆல்–அவுட் ஆனது. ஸ்டெயின் 6 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

அதன்பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி, ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 82 ரன் எடுத்திருந்தது.

3-ம் நாள் ஆட்டத்தில் ஸ்மித் 47 ரன்கள் சேர்த்தார். அம்லா 3, பீட்டர்சன் 62 ஆட்டமிழந்தார்கள். டிவில்லியர்ஸ் 74, டுமினி 28 ரன்களில் ஆட்டம் இழந்தனர். இதனால் 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்பிற்கு 299 ரன்கள் எடுத்தது. காலிஸ் 78 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இன்று 4ம் நாள் ஆட்டத்தில் காலிஸ் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 115 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதன் பின் களம் இறங்கிய ஸ்டெயின் 44, டுபிளிசஸ் 43, பீட்டர்சன் 61 ரன்களில் ஆட்டம் இழந்தனர். பிளண்டர் மற்றும் மோர்கல் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தனர். இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 500 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் ஜடேஜா அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து இந்தியா அணியில் தவான் மற்றும் விஜய் களம் இறங்கி இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தனர். விஜய் 6 ரன்னிலும், தவான் 19 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். 4-வது ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 68 ரன்கள் எடுத்தது. புஜாரா 32 ரன்னிலும், கோலி 11 ரன்னிலும் களத்தில் இருந்தனர். நாளை 5-ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.
...

Durban Test Cricket South Africa team 500 runs

No comments:

Post a Comment

Popular Posts