Wednesday, 11 December 2013

தென்ஆப்பிரிக்காவுடன் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்தியாவுக்கு 302 ரன் இலக்கு South Africa Last ODI cricket match India 302 run target

Img தென்ஆப்பிரிக்காவுடன் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்தியாவுக்கு 302 ரன் இலக்கு South Africa Last ODI cricket match India 302 run target

செஞ்சூரியன், டிச. 11-

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வியடைந்த இந்திய அணி, தொடரையும் இழந்துவிட்டது.

இந்நிலையில் தென்ஆப்பிரிக்கா-இந்தியா அணிகளுக்கிடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் இன்று மாலை தொடங்கியது. தொடரை இழந்தாலும் ஆறுதல் வெற்றியை பதிவு செய்யும் ஆர்வத்துடன் இந்திய அணி களமிறங்கியது. கடந்த இரண்டு போட்டிகளைப் போன்று இந்த முறையும் தென் ஆப்பிரிக்கா முதலில் பேட் செய்தது.

முதல் இரண்டு போட்டிகளைவிட இந்த போட்டியில் இந்தியாவின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. துவக்க விரர்களாக களமிறங்கிய அம்லா 13 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். டேவிஸ்(1), டுமினி (0) ஆகியோரும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். ஆனால், பின்னர் இணைந்த டி காக்-டி வில்லியர்ஸ் ஜோடி இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்ய, அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இருவரும் சதம் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். டிகாக் 101 ரன்களிலும், டிவில்லியர்ஸ் 109 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

6-வது வீரராக களமிறங்கிய மில்லர் விறுவிறுப்பாக ஆடி 32 பந்தில் அரை சதத்தை பதிவு செய்தார். இதனால் தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில், 8 விக்கெட் இழப்பிற்கு 301 ரன்கள் குவித்தது. மில்லர் 56 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்தியா தரப்பில் இஷாந்த் சர்மா 4 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதையடுத்து 302 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடுகிறது.
...

No comments:

Post a Comment

Popular Posts