Img ஆசஷ் 4–வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி Acas 4th Test Australia emphatic win
மெல்போர்ன், டிச. 29–
இங்கிலாந்து–ஆஸ்திரேலியா மோதும் ஆசஷ் தொடரின் 4–வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடந்தது.
முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 255 ரன்னும், ஆஸ்திரேலியா 204 ரன்னும் எடுத்தன. 51 ரன் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவின் அபாரமான பந்து வீச்சில் திணறியது. முடிவில் இங்கிலாந்து 179 ரன்னுக்கு ஆல்–அவுட் ஆனது. அதிகபட்சமாக பீட்டர்சன் 49 ரன் எடுத்தார்.
ஆஸ்திரேலியா அணிக்கு 231 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 3–ம் நாளான நேற்று ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 30 ரன் எடுத்து இருந்தது.
இன்று 4–ம் நாள் ஆட்டம் நடந்தது. தொடக்க வீரர் வார்னர் 25 ரன்னில் அவுட் ஆனார். அதன்பின் ரோஜர்ஸ்–வாட்சன் ஜோடி சிறப்பாக விளையாடியது. இருவரும் இங்கிலாந்து பந்து வீச்சை திணறடித்து ரன்களை குவித்தனர். ரோஜர்ஸ் சதம் அடித்தார். இது அவருக்கு 2–வது சதமாகும். அவர் 116 ரன்னில் அவுட் ஆனார்.
2–வது விக்கெட்டுக்கு ரோஜர்ஸ்–வாட்சன் ஜோடி 136 ரன் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி 51.5 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 231 ரன் இலக்கை எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வாட்சன் 83 ரன்னுடனும், கிளார்க் 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
ஆசஷ் தொடரின் முதல் 3 டெஸ்டிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிவிட்டது. தற்போது 4–வது டெஸ்டிலும் வெற்றி வாகை சூடியது.
இங்கிலாந்து 4–வது தோல்வியை சந்தித்து ஏமாற்றம் அடைந்தது. 5–வது மற்றும் கடைசி டெஸ்ட் வருகிற 3–ந் தேதி சிட்னியில் நடக்கிறது.
...
No comments:
Post a Comment