Sunday, 8 December 2013

ஒரு நாள் கிரிக்கெட்டில் 4 ஆயிரம் ரன்களை அதிவேகமாக கடந்தார், அம்லா Amla exponentially over 4 thousand runs in cricket

Img ஒரு நாள் கிரிக்கெட்டில் 4 ஆயிரம் ரன்களை அதிவேகமாக கடந்தார், அம்லா Amla exponentially over 4 thousand runs in cricket

டர்பன், டிச.9-

டர்பனில் நேற்று நடந்த இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 31 வயதான ஹஷிம் அம்லா 100 ரன்கள் குவித்தார். அவர் 59 ரன்களை எட்டிய போது அவரது ஒட்டுமொத்த ரன் கணக்கு 4 ஆயிரத்தை தொட்டது.

இதுவரை 84 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள அம்லா அதில் 81-வது இன்னிங்சில் களம் இறங்கி இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். இதன் மூலம் 42 ஆண்டுகால ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 4 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற உலக சாதனையை படைத்தார்.

இதற்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் தனது 88-வது இன்னிங்சில் 4 ஆயிரம் ரன்களை கடந்ததே உலக சாதனையாக இருந்தது. அவர் இச்சாதனையை 1985-ம் ஆண்டு படைத்திருந்தார்.
அவரது 28 ஆண்டு கால சாதனை இப்போது அம்லாவிடம் போய் சேர்ந்துள்ளது.

அம்லா இதுவரை 84 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 12 சதம், 23 அரைசதம் உள்பட 4041 ரன்கள் (சராசரி 53.88) சேர்த்துள்ளார். அத்துடன் வேகமாக 2 ஆயிரம் ரன்களை (40 இன்னிங்ஸ்) கடந்தவர், துரிதமாக 3 ஆயிரம் ரன்களை (57 இன்னிங்ஸ்) கடந்தவர் ஆகிய சாதனைகளும் அவரது வசமே இருக்கின்றன.

4 ஆயிரம் ரன்களை வேகமாக எடுத்தவர்களின் சாதனை பட்டியலில் 3-வது இடத்தில் இந்தியாவின் விராட் கோலி உள்ளார். அவர் தனது 93-வது இன்னிங்சில் 4 ஆயிரம் ரன்களை தாண்டியிருந்தார்.

இந்த போட்டியில் நிகழ்த்தப்பட்ட மேலும் சில சாதனைகள் விவரம் வருமாறு:-

தென்ஆப்பிரிக்க வீரர் 20 வயதான குயின்டான் டி காக் இந்த ஆட்டத்திலும் சதம் (106 ரன்) அடித்தார். ஏற்கனவே முதலாவது ஒரு நாள் போட்டியிலும் செஞ்சுரி (135 ரன்) கண்டிருந்தார். இதன் மூலம் தொடர்ந்து இரு ஆட்டங்களில் சதம் விளாசிய 3-வது தென்ஆப்பிரிக்க தொடக்க ஆட்டக்காரர் என்ற சிறப்பை டி காக் பெற்றுள்ளார்.

2002-ல் கிப்சும் (வங்காளதேசம், இந்தியா, கென்யாவுக்கு எதிராக தொடர்ந்து 3 சதம்) 2010-ம் ஆண்டில் அம்லாவும் (ஜிம்பாப்வேக்கு எதிராக தொடர்ந்து 2 சதம்) இதற்கு முன்பு அடுத்தடுத்து சதம் அடித்த தென்ஆப்பிரிக்க தொடக்க ஆட்டக்காரர்கள் ஆவர்.

இந்த ஆட்டத்தில் அம்லாவும், குயின்டான் டி காக்கும் முதல் விக்கெட்டுக்கு 194 ரன்கள் சேகரித்தனர். டர்பன் மைதானத்தில் தொடக்க ஜோடி சேர்த்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு 2002-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட்-மேத்யூ ஹைடன் இணை 170 ரன்கள் எடுத்ததே இந்த மைதானத்தில் முதல் விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட சிறந்த ஸ்கோராக இருந்தது.

இந்த மோதலில் தென்ஆப்பிரிக்க தொடக்க வீரர்கள் டி காக், அம்லா இருவரும் சதத்தை பதிவு செய்தனர். ஒரு நாள் போட்டியில் தொடக்க வீரர்கள் ஒரே இன்னிங்சில் சதத்தை ருசிப்பது இது 27-வது நிகழ்வாகும். அதே சமயம் தென்ஆப்பிரிக்க தரப்பில் தொடக்க ஜோடி சதம் காண்பது இது 2-வது முறையாகும்.

இதற்கு முன்பு 2000-ம் ஆண்டு கொச்சியில் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க தொடக்க ஆட்டக்காரர்கள் கேரி கிர்ஸ்டனும் (115 ரன்), கிப்சும் (111 ரன்) சதம் எடுத்திருந்தனர்.  
...

No comments:

Post a Comment

Popular Posts