Img தென்னாப்பிரிக்க வீரர் காலிஸ் 200 கேட்ச் பிடித்து சாதனை South African batsman Jacques Kallis 200 caught record
டர்பன், டிச.27-
இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையே நடந்து வரும் 2-வது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டி டர்பன் நகரில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியுடன் சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஒய்வு பெறப்போவதாக காலிஸ் அறிவித்திருந்த நிலையில், அதிக கேட்ச் பிடித்த வீரர்கள் வரிசையில் சாதனை படைத்துள்ளார்.
இன்று நடந்த 2-வது நாள் ஆட்டத்தின் போது 108-வது ஒவரை பகுதிநேர சுழற்பந்து வீச்சாளரான டுமினி வீசினார். அந்த ஒவரின் 5-வது பந்தில் இந்திய வீரர் ஜடேஜா கொடுத்த கேட்சை பிடித்த காலிஸ், இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிக கேட்சுகளை பிடித்தவர்களில் 2-வது இடத்தை பிடித்தார். இது வரை 166 போட்டிகளில் கலந்து கொண்ட காலிஸ் 200 கேட்சுகளை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய வீரர் ராகுல் திராவிட் 164 போட்டிகளில் பங்கேற்று 210 கேட்சுகளை பிடித்து முதலிடத்தில் உள்ளார்.
...
No comments:
Post a Comment